Wednesday, April 11, 2012

Soundarya Lahari (1-25) tamil meaning


SOUNDARYA LAHARI
 (1)
शिवः शक्त्यायुक्तो यदि भवति शक्तः प्रभवितुं
न् चेदेवं देवो खलु कुशलः स्पन्दितुमपि
अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि
प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥१॥
 Shivah shakthya yukto yadi bhavati shaktah prabhavitum
Na chedevam devo na khalu kusalah spanditumapi;
Atas tvam aradhyam Hari-Hara-Virinchadibhir api
Pranantum stotum vaa katham akrta-punyah prabhavati 
 சகல உலகங்களையும் படைக்கும் ஈசன், சக்தியாகிய உன்னுடன் இணைந்தால்தான்  இந்த  உலகத்தை படைக்க முடியும்.சக்தி இல்லாமல் சிவனால் செயல்படமுடியாதுமும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ,துதிக்கின்ற உன்னை முன் ஜென்ம புண்ணியம்  இல்லாவிட்டால் துதிக்கவும், வணங்கவும்  முடியுமோ ?
     
(2)  
 तनीयांसं पासुं तव चरणपङ्केरुहभवं
विरिञ्चिः सञ्चिन्वन् विरचयति लोकानविकलम्
वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां
हरः संक्षुद्यैनं भजति भसितोद्धूलन विधिम्  ॥२॥ 

Taniyamsam pamsum tava carana-pankeruha-bhavam
Virincih sanchinvan virachayati lokan avikalam;
Vahaty evam Shaurih katham api sahasrena shirasaam
Harah samksudy'ainam bhajati bhajati bhasito'ddhalama-vidhim.
    உன்னுடைய  பாத  தூளியைச் சேர்த்து , பிரம்மா , இந்த  உலகைப்  படைக்கிறார்ஆயிரம்  தலை  உடைய   ஆதிசேஷனான  திருமால் , அந்த பாத தூளியான சகல    உலகத்தையும்   தாங்குகிறார்சிவனானவர் இந்த பாததூளியை விபூதியாக உடல் முழுவதும்  பூசிக்கொள்கிறார்.       
(3)
अविद्यानामन्तस्तिमिरमिहिरद्वीपनगरी
जडानां चैतन्यस्तबकमकरन्दस्रुतिझरी
दरिद्राणां चिन्तामणिगुणनिका जन्मजलधौ
निमग्नानां दंष्ट्रा मुररिपुवराहस्य भवति ॥३॥
   
Avidyanam antas-timira-mihira-dweeppa-nagari
Jadanam chaitanya-stabaka-makaranda-sruti jhari
Daridranam cinta-mani-gunanika janma-jaladhau
Nimadhanam damshtra mura-ripu-varahasya bhavati.  
 அம்மா ! உன்னுடைய பாத தூளி யானதுஇருளை அகற்றும்  சூரியன்  போல் ,அறியாமை   என்னும் இருள் அகற்றி , ஞானனத்தை நல்கும் . ஏழைக்கு துயர் துடைக்கும் சிந்தாமணி போன்றது. பிரளய  காலத்தில்திருமால் வராக  அவதாரம் எடுத்து எப்படி இந்த   உலகை  கப்பாற்றி னாரோ,   அதுபோல்   பிறவிக்கடலைக்  கடக்க அபயம் தரக்கூடியது

(4)
   त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणः
त्वमेका नैवासि प्रकिटितवराभीत्यभिनया 
भयात्त्रातुं दातुं फलमपि वाञ्झासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥४॥

Tvad anyah paanibhyam abhaya-varado daivataganah
Tvam eka n'aivasi prakatita-var'abhityabhinaya;
Bhayat tratum datum phalam api cha vancha samadhikam
Saranye lokanam tava hi charanaveva nipunav. 
 தாயே ! மற்ற தேவர்களும்,தெய்வங்களும், அபயவர  பிரதானத்தை ,தங்கள்  அபிநய முத்திரைகளால்  காட்ட, நீ மட்டும் அபிநயம் காட்டுவதில்லை. ஏனென்றால்இந்த  அபயவர பிரதானத்தை விட அதிகமாக , வேண்டிய  வரங்களைக்  கொடுப்பதற்கு உன் பாத தாமரை  போதுமே  .
(5)
हरिस्त्वामाराध्य प्रणतजनसौभाग्यजननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभमनयत्
स्मरोऽपि त्वां नत्वा रतिनयनलेह्येनवपुषा
मुनीनामप्यन्तः प्रभवति हि मोहाय महताम् ॥५॥

Haris tvam aradhya pranata-jana-saubhagya-jananim
Pura nari bhutva Pura-ripum api ksobham anayat;
Smaro'pi tvam natva rati-nayana-lehyena vapusha
Muninam apyantah prabhavati hi mohaya mahatam.
 சகல  நமைகளைத் தரும்  தேவீ ! மகாவிஷ்ணு, உன்னை வணங்கி , அழகான பெண் உருவம்  கொண்டு ,சிவனை மோகம் கொள்ளச் செய்கிறார். மன்மதன் உன் பாத கமலத்தை வணங்கி, மூஉலக அழகனாகி,  முற்றும் துறந்த முனிவர்களின் மனதில், மோகத்தை உண்டுபண்ணுகிறான்
(6)
धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्चविशिखाः
वसन्तः सामन्तो मलयमरुदायोधनरथः
तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपा-
मपाङ्गात्ते लब्ध्वा जगदिदमनङ्गो विजयते ॥६॥

Dhanun paushpam maurvi madhu-kara-mayi pancha visikha
Vasantaha samanto Malaya-marud ayodhana-rathah;
Tatha'py ekah sarvam Himagiri-suthe kam api kripaam
Apangat te labdhva jagadidam Anango vijayate
 மன்மதனுடைய வில் மலர்களால் ஆனதுநாண்  வண்டுகளின் வரிசை. பாணங்கள் மலர்களேஅமைச்சன் இளவேனிற்காலம் .    தேரோ தென்றல் காற்று .   இவைகளோடு கூடிய   உருவமற்ற   மன்மதன் உன் அருளினால் இந்த  உலகத்தையே   ஜெயிக்கின்றான் .
(7)
   
क्वणत्काञ्चीदामा करिकलभकुंभस्तननता
परिक्षीणामध्ये परिणतशरच्चन्द्रवदना
धनुर्बाणान् पाशं सृणिमपि दधाना करतलैः
पुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका ॥७॥
Kvanat-kanchi-dama kari-kalabha-kumbha-stana-nata
Pariksheena madhye parinata-sarachandra-vadana;
Dhanur banan pasam srinim api dadhana karatalaii
Purastad astam noh Pura-mathitur aho-purushika.
  முழுநிலவு   போன்று  மலர்ந்த  முகத்துடனும் , இடையிலே  ஒட்டியாண  சலங்கை ஓசையுடனும்யானையின் கும்பத்தைப் போன்று ஸ்தனபாரத்துடனும்கைகளில் கரும்புவில், மலர்பானம்பாசக்கயிறு ட்டிகரங்களுடன்   அலங்காரமாகத் தோன்றும் அன்னையே ! எங்களுக்கு  காட்சி தருவாயாக  ! 
(8)
सुधासिन्धोर्मध्ये सुरविटपिवाटीपरिवृते
मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणिगृहे
शिवाकारे मञ्चे परमशिवपर्यंकनिलयां
भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्दलहरीम् ॥८॥ 
Sudha-sindhor madhye sura-vitapi-vati parivrte
Mani-dweepe nipo'pavana-vathi chintamani-grhe;
Shivaakare manche Parama-Shiva-paryanka-nilayam
Bhajanti tvam dhanyah katichana chid-ananda-laharim.
 அமிர்தகடலின் மத்தியில் , கடம்பவன காடுகளால் சூழப்பட்டு , சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட  மணித்வீபம்  என்னும்  அரண்மனையில் அந்தப்புரத்தில் பரமசிவனுடைய மடியில்ஆனந்த  சல்லாபத்துடன்  சயனித்திருக்கும் அன்னையே ! உன்னை வணங்குபவர்களே  உயர்ந்தவர்கள் .    
(9)
महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं
स्थितं स्वाधिष्ठाने हृदि मरुतमाकाशमुपरि
मनोऽपि भ्रूमध्ये सकलमपि भित्त्वा कुलपथं
सहस्रारे पद्मे सह रहसि पत्या विहरसे ॥९॥ 
Mahim muladhare kamapi manipure huthavaham
Sthitham svadhistane hridi marutamakasam upari;
Mano'pi bhruu-madhye sakalamapi bhittva kula-patham
Sahasrare padme saha rahasi patyaa viharase.
  மூலாதார  ( பூமி  ),  ஸ்வாதிஷ்டான ( அக்னி ), மணிபூரக (நீர் ) , அனாகத ( வாயு  ),  விசுத்தி  (ஆகாயம்) என்ற பஞ்ச பூதத்தையும் , ப்ருத்வி மனோமாயா , சுத்தவித்யா , மகேஸ்வர, சதாசிவ தத்வம் என்னும் நால்வகை  தத்வங்களையும்  தாண்டி  சந்திர மண்டலத்தில் ஆயிரம் இதழ்களைக் கொண்ட  தாமரையில் சதாசிவனுடன் கூடி அன்னை  மகிழ்கின்றாள் .  
(10)
सुधाधारासारैश्चरणयुगलान्तर्विगलितैः  
प्रपञ्चं सिञ्चन्ती पुनरपि रसाम्नायमहसः
अवाप्य स्वां भूमिं भुजगनिभमध्युष्टवलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ॥१०॥
Sudha-dhara-sarais carana-yugalanta vigalitaih
Prapancham sinchanti punarapi ras'amnaya-mahasah;
Avapya svam bhumim bhujaga-nibham adhyusta-valayam
Svam atmanam krtva svapishi kulakunde kuharini
  சந்திர   மண்டலத்திலிருக்கும்    அன்னையின் திருவடிகளிலிருந்து பெருகும் அமிர்த வெள்ளமானது , இந்த உலகமாகிய  உடலின்   நாடிகளை நனைக்கிறதுபிறகு சந்திர மண்டலத்திலிருந்து ஒரு சர்பமாகத்  தன்னைச் சுற்றிக்கொண்டு , தன்னுடைய ஆதாரமான மூலாதார சக்கரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அன்னை  யோகநித்திரை  செய்கிறாள்
(11)
चतुर्भिः श्रीकण्ठैः शिवयुवतिभिः पञ्चभिरपि
प्रभिन्नाभिश्शंभोर्नवभिरपि मूलप्रकृतिभिः
चतुश्चत्वारिंशद्वसुदलकलाश्रत्रिवलय-
त्रिलेखाभिस्सार्धं तव शरणकोणाः परिणताः ॥११॥
Chaturbhih shri-kantaih shiva-yuvatibhih panchabhir api
Prabhinnabhih sambhor navabhir api mula-prakrthibhih;
Chatus-chatvarimsad vasu-dala-kalasra-trivalaya-
Tri-rekhabhih sardham tava sarana-konah parinatah
 சிவச் சக்கரங்கள் 4 , சக்திச் சக்கரங்கள் 5 , இந்த மூலச் சக்கரங்களானசக்கரங்களோடு,  அஷ்டதள ( 8 ) , சோடசதள( 16), த்ரிவலய ( 3 சுற்று ), த்ரீ ரேகைகளோடு     ( 3கோடுகள் ) கூடிய உன் இருப்பிடம் ,           நாற்பத்தி  நான்கு     கோணங்கள்      கொண்ட     உன்
 ஸ்ரீ சக்கரமாக விளங்குகிறது.   
(12)
त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं
कवीन्द्राः कल्पन्ते कथमपि विरिञ्चिप्रभृतयः
यदालोकौत्सुक्यादमरललना यान्ति मनसा
तपोभिर्दुष्प्रापामपि गिरिशसायुज्यपदवीम्  ॥१२॥
Tvadiyam saundaryam Tuhina-giri-kanye tulayitum
Kavindrah kalpante katham api Virinchi-prabhrutayah;
Yadaloka'utsukyad amara-lalana yanti manasa
Tapobhir dus-prapam api girisa-sayujya-padavim.
 
 தேவீ ! உன் மேனியின்  அழகினைப் பார்த்து , ரம்பை , ஊர்வசி போன்ற தேவலோக மங்கையரும் கூட, ஆசைப்படுகிறார்கள் . படைக்கும் கடவுள்   பிரம்மாவினால்  கூட உன்னுடைய பேரழகை   வருணிக்க முடியவில்லை . அந்த பேரழகை  பரமசிவனால் மட்டுமே அனுபவிக்க முடியும் . எனவே பரம  தபஸ் விகளால்  கூட அடைய முடியாத அந்த  சிவசாயுஜ்ய  பதவியை , தேவலோகப் பெண்கள்  மனதால் அடைய விரும்புகிறார்கள்   .
(13)
नरं  वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तवापांगालोके पतितमनुधावन्ति शतशः
गलद्वेणीबन्धाः कुचकलशविस्रस्तसिचया
हठात्त्रुट्यत्काञ्च्यो विगलितदुकूला युवतयः ॥१३॥

Naram varshiyamsam nayana virasam narmasu jadam,
Thava panga loke pathitha manudhavanthi sathasa
Gala dweni bhandha kuch kalasa visthrutha sichaya
Hatath thrudyath kanchyho vigalidha dhukoola yuva thaya.
 
 தாயே ! ஒருவன் எவ்வளவு வயதானவனாக இருந்தாலும் , அழகில்லாமல் உடல் பலம்  அற்றவனாக இருந்தாலும் , காமரச சல்லாபம் தெரியாதவனாக இருந்தாலும் , உன் பார்வை அவன் மீது பட்டால், இளவயது மங்கையரும் கூட ,கூந்தல் அவிழ , மேலாடை நழுவ , இடையினில் ஒட்டியாணம் தெறிக்க, தன்னை மறந்து அவன் மீது   மோஹம் கொண்டு , அவனை மன்மதன்  என்று எண்ணி அவனைத் தொடர்வார்கள்
(14)
क्षितौ षट्पञ्चाशद् द्विसमधिकपञ्चाशदुदके
हुताशे द्वाषष्टिश्चतुरधिकपञ्चाशदनिले
दिवि द्विषट्त्रिंशन्मनसि चतुःषष्टिरिति ये
मयूखास्तेषामप्युपरि तव पादांबुजयुगम् ॥१४॥
Ksitau sat-panchasad dvi-samadhika-panchasadudake
Hutase dva-sastis chatur-adhika-panchasad anile;
Divi dvih-shatrimsan manasi cha chatuh-sashtir iti ye
Mayukhastesham athyupari tava padambuja yugam.
 தாயே !  உன்னுடைய பாத  கமலம்  ஆதார  சக்கரங்களான  மூலாதாரத்தில் 56     ( பூமி ), மணிபூரகத்தில் 52 ( நீர் ) ,  சுவாதிஷ்டானத்தில் 62 (அக்னி ), அனாகதத்தில் 54 (வாயு), விசுத்தியில் 72 (ஆகாயம் ), ஆஜ்ஞா சக்கரத்தில்  64  ஆகிய  இந்த கிரணக்களுக்கு மேலே ஆயிரம் தள தாமரையில் ஒளிர்கின்றது .  
(15)
  शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां
वरत्रासत्राणस्फटिकघुटिकापुस्तककराम्
सकृन्नत्वा नत्वा कथमिव सतां सन्निदधते 
मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणा फणितयः  ॥१५॥
Saraj-jyotsna-shuddham sasi-yuta-jata-juta-makutam
Vara-traasa-traana-sphatika-ghutika-pustaka karaam;
Sakrn na thva nathva katham iva sathaam sannidadhate
Madhu-kshira-drakhsa-madhurima-dhurinah phanitayah. 

 இலையுதிர்  காலச் சந்திரனைப் போன்று வெண்மையான உடல் அழகினைக் கொண்டவளும்சந்திரனை மகுடமாகத் தரித்தவளும்அபய வரப்  பிரதான முத்திரைகளுடன் ,கையில் புத்தகம் , ஸ்படிகமாலை இவைகளை  உடையவளுமான உன்னை ஒரு முறையாவது வணங்குகின்ற பக்தனுக்குதேன் , பால் , திராட்ஷை இவைகளையும் விட ,மிக இனிமையான வாக்கு பலம் கிடைக்கும் என்பது நிச்சயமே
(16)
कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम्
विरिञ्चिप्रेयस्यास्तरुणतर शृंगारलहरी-
गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥१६॥
Kavindranam chetah-kamala-vana-baal'atapa-ruchim
Bhajante ye santah katichid arunameva bhavatim;
Virinchi-preyasyas tarunatara sringara-lahari-
Gabhirabhi vagbhir vidadhati satam ranjanamami.
  
 கவிகளின் மனமாகிய தாமரை மலரை மலரச்  செய்கின்ற , இளஞ்  சூரியனைப்  போல் செந்நிற மேனி அழகை உடையவளே ! உன்னை வணங்குபவர்களுக்கு , காலத்தைக் கடந்த ஒரு பக்திப் பரவச நிலை ஏற்பட்டு (விழிப்புணர்வு) , அதன்  மூலம் சரஸ்வதியின் அருள்  பெற்றுதெய்வீகக் கவிகள் படைக்கும் திறமை பெற்று  , அதனால்  மற்றவர்களையும் மகிழ்விக்கின்றனர்.
(17)
सवित्रीभिर्वाचां शशिमणिशिलाभंगरुचिभिः
वशिन्याद्याभिस्त्वां सह जननि सञ्चिन्तयति यः।
कर्ता काव्यानां भवति महतां  भंगिरुचिभि-
र्वचोभिर्वाग्देवी वदनकमलामोदमधुरैः  ॥१७॥
Savitribhir vacham Chasi-mani-sila-bhanga-rucibhir
Vasiny'adyabhis tvam saha janani samchintayati yah;
Sa karta kavyanam bhavati mahatam bhangi-rucibhih
Vacobhi vagdevi-vadana-kamal'amoda madhuraii..


 சந்திரகாந்தக் கற்கள்  போல் ,வெண்மையான வசினி முதலாய  வாக்தேவதைகளால்   சூழப்பட்டவளே ! உன்னை  முழு மனதுடன் தியானம் செய்பவனுக்கு , மஹா கவிகளின் வாக்குகள் போல் , சரஸ்வதி தேவியின் இனிமையான  வாக்விலாசத்தை உடையவனாய் , மஹா காவியங்கள் படைக்கும் திறமை உடையவனாய் ஆகின்றான்
(18)
तनुच्छायाभिस्ते तरुणतरणिश्रीसरणिभि-
र्दिवं सर्वामुर्वीमरुणिमनिमग्नां स्मरति यः।
भवन्त्यस्य त्रस्यद्वनहरिणशालीननयनाः
सहोर्वश्या वश्याः कति कति गीर्वाणगणिकाः ॥१८॥
Thanuschayabhi sthe tharuna-tharuni -srisarinibhi
Divam sarva-murvi-marunimani magnam smaranthi ya
Bhavanthasya thrasya-dhwana-harina shaleena nayana
Sahervasya vasya kathikathi na geervana Ganika
 
 உதய சூரியன் போல், உன் மேனியிலிருந்து வருகின்ற அழகான சிவந்த  கிரணங்களினால்இந்த பூமி, ஆகாயம்  முழுவதும் சிவப்பு  நிறத்தில் மூழ்கி இருப்பதாக (அருணா தேவீ ரூபம்)   தியானம் செய்யும் பக்தர்களிடம் , மருண்ட மான் விழிகளைக் கொண்ட, ரம்பை ஊர்வசி  போன்ற தேவலோக பெண்களும் வசப்படுகிறார்கள் . அப்படியிருக்க சாதாரண  பெண்களைப்பற்றிச் சொல்லவும்  வேண்டுமோ ?
(19)
मुखं बिन्दुं कृत्वा कुचयुगमधस्तस्य तदधो
हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम्
सद्यः संक्षोभं नयति वनिता इत्यति लघु
त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दुस्तनयुगाम्  ॥१९॥
Mukham bindun kruthva kucha yuga mada sthasya thadha dho
Harardha dhyayedhyo haramamahishi the manmathakalam
Sa sadhya samkshebham nayathi vanitha inyathiladhu
Thrilokimapyasu bramayathi ravindu sthana yugam.

 சிவனின் துணைவியே ! காமகலா ரூபிணி ! உன் முகத்தை   பிந்துஸ் ஸ்தானமாகவும், அதன் கீழ் உன் இரு  ஸ்தனங்களையும், அதன்  கீழ் சக்தி வடிவத்தையும் , தியானித்து , அதில் மன்மதக்  கலையை எவன் துதிக்கிறானோ , அவன் எல்லா பெண்களின் மனத்திலும் காம விகாரத்தை  ஏற்படுத்துகிறான் . சூர்ய சந்திரர்களை  ஸ்தனங் களாகக் கொண்ட  மூஉலகப் பெண்களையும்  தன்   வசப்படுத்துகிறான்
(20)
किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरुंबामृतरसं
हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः।
सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव
ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥२०॥
Kirantim angebhyah kirana-nikurumba'mrta-rasam
Hrdi tvam adhatte hima-kara-sila murthimiva yah;
Sa sarpanam darpam samayati sakuntadhipa iva
Jvara-plustan drshtya sukhayati sudhadhara-siraya.
 
 அன்னையே ! சந்திர காந்தக் கற்களினால் செய்யப்பட்டதுபோல் அழகிய உருவம் கொண்டவளே ! உன்னை வணங்கும் அடியார்க்கு , உன் அங்கங்களிலிருந்து பெருகும்  அமிர்த   மழையினை வாரி வழங்குபவளே  ! அதனால் உன் அருள்   பெற்றவன் ஆடும் பாம்பிற்கு சாடும் கருடனைப்   போலவும் , ஜுரத்தினால் பாதிக்கப்  பட்டவர்களுக்கு, உன்னால் கிடைக்கப் பெற்ற அமிர்த  பார்வையினாலேயே , நிவர்த்தியைத் தருபவனாகவும் இருந்து, அவர்களின் நோயை  குணப்படுத்துகிறான் .  
(21)
तटिल्लेखातन्वीं तपनशशिवैश्वानरमयीं
निषणां षण्णामप्युपरि कमलानां तवकलाम्
महापद्माटव्यां मृदितमलमायेन मनसा
महान्तः पश्यन्तो दधति परमाह्लादलहरीम् ॥२१॥
Tatil-lekha-thanvim thapana-sasi-vaisvanara-mayim
Nishannam shannam apy upari kamalanam tava kalaam;
Maha-padma tavyam mrdita-mala-mayena manasa
Mahantah pasyanto dadhati parama'hlada-laharim.

 தாயே ! ஆனந்தவல்லி ! ஆறு  ஆதார சக்கரங்களுக்கும்  மேலே , தாமரைக்காடு  போன்ற ஆயிரம் தளத் தாமரையில், மின்னல் கொடி போன்று, சூர்யா சந்திர  அக்னிவடிவம் கொண்டவளே உன்னுடைய 'சாதா '   என்ற கலையை காமம், மாயை , அறியாமை விட்டஞானிகளும் தியானித்து ஆனந்தநிலை பெறுகிறார்கள்

(22)
भवानि! त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणां
 इति स्तोतुं वाञ्छन् कथयति भवनि ! त्वमिति यः।
 तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्यपदवीम्
 मुकुन्दब्रह्मेन्द्रस्फुटमकुटनीराजितपदाम्  ॥२२॥
Bhavani tvam daase mayi vitara drishtim sakarunam
Iti sthotum vanchan kadhayati Bhavani tvam iti yah;
Tadaiva tvam tasmai disasi nija-sayujya-padavim
Mukunda-brahmendra-sphuta-makuta-nirajita-padam.

 தாயே ! உன்னுடைய பக்தன் உன்னைப் பார்த்து , தாயே !    பவானி ! உன்னுடைய கடைக்கண் பார்வை இந்த அடியவன் மீது படட்டும் என்று நினைத்து , 'பவானி நீ ' என்று சொல்ல  ஆரம்பித்த உடனேயே , மும்மூர்த்திகளால் வணங்கப்பட்ட உனக்குஅவன் மீது மிகுந்த கருணை ஏற்பட்டு, அவனுக்கு உன் சாயுஜ்ய பதவியைத் தருகின்றாய் .  ( மோக்ஷத்தைத்   தருகிறாய்
(23)
त्वया हृत्वा वामं वपुरपरितृप्तेन मनसा
शरीरार्धं शम्भोरपरमपि शङ्के हृतमभूत्।
यदेतत्त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं
कुचाभ्यामानम्रं कुटिलशशिचूडालमकुटम् ॥२३॥ 
Tvaya hrithva vamam vapur aparitripthena manasa
Sarir'ardham sambhor aparam api sankhe hritham abhut;
Yad ethat tvadrupam sakalam arunabham trinayanam
Kuchabhyam anamram kutila-sadi-chuudala-makutam.

 அம்மா ! சிவந்த சந்திரக்கலையுடன் கூடிய மணிமுடி , மூன்று கண்கள் , பருத்த இரு ஸ்தனங் களோடு, நீ  சற்று   முன்புறம்  சாய்ந்து  இருப்பதைப் பார்த்தால், நீ, ஆதி சிவனுடைய இடப்பாகத்தை அபஹரித்தது  போதாமல் , ஆசை தணியாமல், அவருடைய முழு பாகத்தையும் அபஹரித்து விட்டது  போல்  தோன்றுகிறது .  
(24)
जगत्सूते धाता हरिरवति रुद्रः क्षपयते
तिरस्कुर्वन्नेतत् स्वमपि वपुरीशस्तिरयति
सदापूर्वः सर्वं तदिदमनुगृह्णाति शिवः
तवाज्ञामालंब्य क्षणचलितयोर्भ्रूलतिकयोः ॥२४॥
Jagat suthe dhata harir avati rudrah kshapayate
Tiraskurvan etat svam api vapurisastirayati;
Sada-purvah sarvam tad idamanugrhnati cha Shiva-
Stavajnam aalambya kshana-chalitayor bhru-latikayoh.
 தாயே ! படைக்கும் கடவுளான பிரம்மா , காக்கும் கடவுளான விஷ்ணு , அழிக்கும் கடவுளான ருத்ரன்  ஆகிய மூவரையும்  ஈசனானவர் தன்னுள் மறையும்படி  செய்து தானும் மறைகிறார்  (கண்ணுக்குத் தெரியாமல் ).  பின் உன் கொடி போன்ற புருவத்தின் அசைப்பால், நீ  காட்டிய  உத்தரவை மதித்து, சதாசிவன்  இன்நால்வருக்கும்  அனுக்கிரகம் செய்து  , மீண்டும் உலகத்தை உற்பத்திச் செய்வதற்காக அவர்களைப் படைக்கிறார் .
(25)
त्रयाणां देवानां त्रिगुणजनितानां तव शिवे
भवेत् पूजा पूजा तव चरणयोर्या विरचिता
तथा हि त्वत्पादोद्वहनमणिपीठस्यनिलये
स्थिता ह्येते शश्वन्मुकुलितकरोत्तंसमकुटाः ॥२५॥
Trayanam devanam thri-guna-janitanam tava Sive
Bhavet puja puja tava charanayor ya virachita;
Tatha hi tvat-pado'dvahana-mani-pithasya nikate
Sthita hy'ete sasvan mukulita-karottamsa-makuta

 அன்னையேதேவீ ! மும்மூர்த்திகளான பிரம்மா ,விஷ்ணு, ருத்ரன்  (முக்குணங்களை உடையவர்கள் ) ஆகியோர், தன் மணிமுடிகளின் மீது , கூப்பிய கரங்களுடன் உன்னை வணங்கியபடி நிற்பதால் , உன்   சரணங்களுக்குச் செய்யும் பூஜையானது, அவர்களையும்  பூஜிப்பது  போல் ஆகின்றது.

18 comments:

 1. அழகாக எளிய தமிழில் அர்த்தம் கொடுத்துள்ளீர்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பேருதவி ! மேலும் தொடர்ந்திடுக... உமது பணி....உமா முரளி.

  ReplyDelete
 2. Really very superb. Hats off to you for your work.

  ReplyDelete
 3. Thanks..It's very good

  ReplyDelete
 4. Very nice madam. Thank you so much. Please continue writing such blogs.

  ReplyDelete
 5. ENN VANAKAM

  NANDRY

  ReplyDelete
 6. Very good translation ..thanks alott. Are there more? The complete slokas? If yes pl let me know where i can read them.

  ReplyDelete
 7. Thank you reading my post. You can find the link of full soundarya laharI in blog archive near sloka 1

  ReplyDelete
 8. Excellent and good work. Translations are also very nice.
  Keep up your good work and continue further.
  My blessings.
  R.Lakshminarayanan Aged 77,
  Retd. Rly Engineer, Kodambakkam,Chennai.

  ReplyDelete
 9. Hare Krishna!!
  Thank You Matha ji Thank you very much
  Hare Krishna!!

  ReplyDelete
 10. Sir, Pranams. Thank you very much for this noble work. May Amba bless you and your family with all Her grace..

  ReplyDelete
 11. Keep up your good work and continue further.
  My blessings.

  ReplyDelete
 12. mani-pithasya nikate = mani - pithasya nilaye

  ReplyDelete
 13. manipeetasya nikate only .thank you. sorry for the delay

  ReplyDelete
 14. Pl fwd 63rd sloka with meaning to krishnun1960@gmail.com

  ReplyDelete