Thursday, April 19, 2012

Soundarya lahari (26-50) tamil meaning



(26)

विरिञ्चिः पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं
विनाशं कीनाशो भजति धनदो याति निधनम्
वितन्त्री माहेन्द्रीविततिरपि सम्मीलित दृशा
महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पतिरसौ ॥२६॥

Virincih panchatvam vrajati harir apnoti virathim
Vinasam kinaso bhajati dhanado yati nighanam;
Vitandri mahendri vithathir api sammeelita-drsa
Maha-samhare smin viharati sati tvat-patirasau.
  தாயே ! மஹா பிரளய காலத்தில்  பஞ்சபூதங்களும் , பிரம்மா ,விஷ்ணு , யமன் , குபேரன் முதலியோரும் , தேவேந்திரன் உள்ளிட்ட மற்ற தேவர் கூட்டமும் அழிய , நீ மட்டும் அழியாமல் சதாசிவனின்  சம்ஹார ருத்ர தாண்டவத்தைப் பார்த்து மகிழ்வது , உன் கற்பின் சக்தியால் அன்றோ ? (கடைசியில் சிவனும் சக்தியும் மட்டுமே இருப்பது மீண்டும் உலகத்தை உண்டாக்க ). 
(27)
 जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना
गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुति विधिः
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पणदृशा
सपर्या पर्यायस्तव भवतु यन्मे विलसितम् ॥२७॥
Japo jalpah shilpam sakalam api mudra-virachana
Gatih pradaksinya-kramanam asanady'ahuti-vidhih;
Pranamah samvesah sukham akilam atmarpana-drsa
Saparya-paryayas tava bhavatu yan me vilasitam.
 தாயேநான் பேசுவது எல்லாம் உன்  மந்திர  ஜபமாகவும் , என் உடல் அசைவு உன்னுடைய  பூஜாரூபமான முத்திரைகளாகவும் , நான் நடப்பது உன்னை வலம் வருவதாகவும் ,நான் சாப்பிடுவது  உன்னைக்குறித்துச்  செய்யும் ஹோமத்தின் ஆகுதியாகவும்  , படுப்பது உன்னை வணங்குவதாகவும் , நான் செய்யும் மற்ற  செயல்கள் யாவும்   உனக்குச் செய்யும் பூஜையாக இருக்கட்டும்.
(28)
सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं
विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः
करालं यत्क्ष्वेलं कबलितवदः कालकलना
शंभोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥२८॥
Sudham apy asvadya pratibhaya-jaraa-mrtyu-harinim
Vipadyante visve Vidhi-Satamakhadya divishadah;
Karalam yat ksvelam kabalitavatah kaala-kalana
Na Sambhos tan-mulam tava janani tadanka-mahima.
 தாயே ! மஹா பிரளய காலத்தில் பிரம்மா , இந்திரன்  முதலான  தேவர்கள் , முதுமை , மரணம் நீக்கும் அமிர்தம் அருந்திய பிறகும் அழிந்து போகின்றனர் . ஆனால் ஆலகால  விஷத்தை அருந்திய உன் துணைவன் சதாசிவன் மட்டும் காலன் வசப்படவில்லை . கற்புக்கரசியே ! இதற்குக் காரணம் உன் தாடங்க (காதணி ) மகிமை தானே
(29)
किरीटं वैरिञ्चं परिहर कैटभभिदः
कठोरे कोटीरे स्खलसि जहि जंभारि मकुटम्
प्रणम्रेष्वेतेषु प्रसभमभियातस्य भवनम्
भवस्याभ्युत्थाने तव परिजनोक्तिर्विजयते ॥२९॥
Kiritam vairincham parihara purah kaitabha bhidah
Katore kotire skalasi jahi jambhari-makutam;
Pranamreshwateshu prasabha mupayatasya bhavanam
Bhavasy'abhyutthane tava parijanoktir vijayate.
  உன்னைக் காண்பதற்கு , சிவன் உன் இருப்பிடம் தேடி வரும்போது , நீ வேகமாக பரபரப்புடன்  எழுந்து வருவதைக் கண்ட உன் சக  தோழிகள் , ஹரி , ஹரன் , இந்திரன் முதலான பிரம்மாதி தேவர்கள் உன்னை  நமஸ்க்கரிப்பதால் அவர்களுடைய மணி மகுடங்கள் உன் காலில் இடறப்போகின்றதே , அவைகளை  ஓதிக்கிவிடு  என்று உனக்கு  நினைவு கூர்வது  உன் பெருமையை எடுத்துக் காட்டுகிறது
  
(30)
  स्वदेहोद्भूताभिर्घृणिभिरणिमाद्याभिरभितो
निषेव्ये नित्ये त्वामहमिति सदा भावयति यः
किमाश्चर्यं तस्य त्रिणयनसमृद्धिं तृणयतो
महासंवर्ताग्निर्विरचयति नीराजनविधिम् ॥३०॥
Sva-deh'odbhutabhir ghrnibhir animadyabhir abhito
Nishevye nitye tvamahamiti sada bhavayati yah;
Kim-ascharyam tasya tri-nayana-samrddhim trinayato
Maha-samvartagnir virchayati nirajana-vidhim.
  ஆதி  அந்தமில்லாத தாயே ! உன்னுடைய சரணங்களிலிருந்து  வெளிவரும்  கிரணங்களாகிய அணிமா , மஹிமா போன்ற ( 8 )  சக்திகளால்  சூழப்பட்டவளே ! உன்னை  எவன்  எப்பொழுதும் மனதில் தியானம் செய்கிறானோ , அவனுக்கு சிவ சாயுஜ்ய பதவி கூட ஒரு வறண்ட புல்  போல் தோன்றும் . மகா பிரளய கால அக்னி அவனுக்கு மங்கள ஹாரத்தி செய்திடும் என்பதில் என்ன ஆச்சர்யம் ?  
(31)
*चतुःषष्ट्या तन्त्रैः सकलमतिसन्धाय भुवनं
स्थितः तत्तत्सिद्धिप्रसवपरतन्त्रैः पशुपतिः।
पुनस्त्वन्निर्बन्धादखिलपुरुषार्थैकघटना-
स्वतन्त्रं ते तन्त्रं क्षितितलमवातीतरदिदम् ॥३१॥
Cautuh-shashtya tantraih sakalam atisamdhaya bhuvanam
Sthitas tat-tat-siddhi-prasava-para-tantraih pasupatih;
Punas tvan-nirbandhad akhila-purusarth'aika ghatana-
Svatantram te tantram khsiti-talam avatitaradidam.
  நாம் விரும்புகின்ற  அந்தந்த   சித்திகளைப்  பெறுவதற்கு 64 சாத்திரங்களை   அளித்து சிவனும் மௌனமாக இருந்தார்  . அதனை உலகம்  தவறாக பயன்படுத்தி ,   துராசாரத்தில் ஈடுபடுவதைப் பார்த்து  சிவன் மெளனமாக இருந்தார் . திரும்பவும் உன்னுடைய கட்டாயத்தால் சகல புருஷார்த்தங்களையும்  ஒருங்கே கொடுக்கக்கூடிய   பஞ்சதசாக்ஷரி   என்ற மந்திரத்தை உலகுக்கு  அளித்தாயே !  

(32)
*शिवः शक्तिः कामः क्षितिरथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्रस्तदनु परामारहरयः
अमी हृल्लेखाभिस्तिसृभिरवसानेषु घटिताः
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम्  ॥३२॥
Sivah saktih kamah kshitir atha ravih sithakiranah
Smaro hamsah sakrastadanu cha para-mara-harayah;
Amee hrllekhabhis tisrbhir avasanesu ghatitha
Bhajante varnaste tava janani nam'avayavatham.
 சிவ , சக்தி , காமப்ருத்வீ பீஜங்கள் ஒரு  பிரிவும்ரவி, சந்திரமன்மத , ஹம்ச,    இந்திர  பீஜங்கள் ஒரு பிரிவும், பரா , மன்மதா, ஹரி பீஜங்கள் ஒரு பிரிவும் ஆகிய இந்த பீஜங்களின் கடைசியில் சேர்க்கப்பட்ட  ஹ்ரீம் காரங்களும்  சேர்ந்து இந்த 15  அட்ஷரங்களும் உன்னுடைய  மஹா மந்திரப்  பகுதிகளின் அங்கங்களாக விளங்குகின்றன .   

(33)
*स्मरं योनिं लक्ष्मीं त्रितयमिदमादौ तव मनोः
निधायैके नित्ये निरवधिमहाभोगरसिकाः।
भजन्ति त्वां चिन्तामणिगुणनिबद्धाक्षवलयाः
शिवाग्नौ जुह्वन्तस्सुरभिघृतधाराहुतिशतैः॥३३॥
Smaram yonim lakshmim trithayam idam adau tava manor
Nidhay'aike nitye niravadhi-maha-bhoga-rasikah;
Bhajanti tvam chintamani-guna-nibaddh'aksha-valayah
Sivagnau juhvantah surabhi-ghrta-dhara'huti-sataih.
 தாயே ! உன்னை எப்போதும் தொடர்ச்சியாக    இடைவெளி இல்லாமல் தியானம் செய்து அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை உணர்ந்தவர்களான  சிவ யோகீஸ்வரர்கள் , சிந்தாமணி யாலான அட்ஷ மாலையை   உடையவர்களாய் , உன்னுடைய மந்திரத்தின் முன்காமபீஜ மந்த்ரமான  "க்லீம்", புவனேஸ்வரி மந்த்ரமான " ஹ்ரீம் ", லக்ஷ்மி மந்த்ரமான" ஸ்ரீம் ", இவைகளைச் சேர்த்துத்ரீ  கோணமான அக்னி குண்டத்தில் , ஸ்ரீ சக்கரத்தில் இருக்கும் உன்னை எண்ணி பசு நெய்  தாரைகளால் ஹோமம் செய்து உன்னை   மகிழ்விக்கின்றனர் .  
(34)
                            
*शरीरं त्वं शंभोः शशिमिहिरवक्षोरुहयुगं
तवात्मानं मन्ये भगवति! नवात्मानमनघम्
अतः शेषः शेषीत्ययमुभयसाधारणतया
स्थितः संबन्धो वां समरसपरानन्दपरयोः ॥३४॥
Sariram twam sambhoh sasi-mihira-vakshoruha-yugam
Tav'atmanam manye bhagavati nav' atmanam anagham;
Atah seshah seshityayam ubhaya-saadharana taya
Sthitah sambandho vaam samarasa-parananda-parayoh.
 ஈஸ்வரியே ! என்னுடைய மனக் கண்ணால் உன்னைப் பார்க்கும் பொழுது , சூர்ய  சந்திரர்களை ஸ்தனமாகக் கொண்டு , நீ  பரமேஸ்வரனுக்கு உடலாக இருக்கின்றாய்உன்னுடைய  உடல் தோஷமற்ற புதிய ஆத்மாவாகவும் ,   நவ  வியூக  ஆத்மாவான சிவனுடைய   உடல்  உன்னுடயதாகவும்  இருக்கிறது . எனவே உனது  கரி நிறம் ஆனந்த பைரவர் உடலாகவும்  , சிவனின் உடல்  உனதாகவும் தோன்றுகிறது . எனவே நீங்கள் இருவரும்  ஒன்றுபட்ட உடலாக , சமமான குணங்களை உடையவராக இருப்பதால் , நான் , எனது என்ற   சம்பந்தமும் ஒன்றாக இருப்பதால்ஆனந்தபைரவர் , ஆனந்தபைரவி யாக எல்லா வகையிலும் சமமாக இருக்கிறிர்கள்.  
  
(35)
                          
मनस्त्वं व्योमत्वं मरुदसि मरुत्सारथिरसि
त्वमापस्त्वं भूमिस्त्वयि परिणतायां हि परम्
त्वमेव स्वात्मानं परिणमयितुं विश्ववपुषा
चिदानन्दाकारं शिवयुवतिभावेन बिभृषे ॥३५॥
Manas tvam vyoma tvam marud asi marut saarathir asi
Tvam aastvam bhoomis tvayi parinathayam na hi param;
Tvam eva svatmanam parinamayithum visva-vapusha
Chidanand'aakaram Shiva-yuvati-bhaavena bibhrushe.
 தாயே ! நீயே  மனஸ் , ஆகாய , வாயு , அக்னி , நீர் , பூமி   தத்துவம்நீயேதான்   இந்த உலகமாக இருக்கிறாய்நீயேதான்  பிரம்மஸ்வரூபமான   சிவதத்வம்இந்த உலகத்திற்காக நீயேதான் சிவனின் பட்ட  மஹிஷியாகவும்  இருக்கின்றாய் .

(36)

*तवाज्ञाचक्रस्थं तपनशशिकॊटिद्युतिधरं
परं शंभुं वन्दे परिमिलितपार्श्वं परचिता
यमाराध्यन् भक्त्या रविशशिशुचीनामविषये
निरालोके लोके निवसति हि भालोकभुवने ॥३६॥
Tavaagna chakrastham thapana shakthi koti dhyudhidharam,
Param shambhum vande parimilitha -paarswa parachitha
Yamaradhyan bhakthya ravi sasi suchinama vishaye
Niraalokeloke nivasathi hi bhalokha bhuvane
 தாயே ! உன்னுடைய  புருவ மத்தியில் உள்ள  ஆஜ்ஞா  சக்கரத்தில் இருப்பவரும் , ஆயிரம்  கோடி சூர்ய சந்திரர்களின் ஒளியை உடையவரும் , சகுண , நிர்குண சக்திகளை இரு  பக்கங்களில்  உடையவருமான , பரமசிவனையும் , உன்னையும் எவன் தியானம் செய்கிறானோ அவன் , ஆயிரம் கோடி சூர்ய சந்திரனைவிட ஒளிமிகுந்த (கண்ணுக்கு புலப்படாத ) ஒரு ஜோதிமயமான உயர்ந்த  உலகத்தை அடைகிறான் .

(37)
 *विशुद्धौ ते शुद्धस्फटिकविशदं व्योमजनकं
शिवं सेवे देवीमपि शिवसमानव्यवसितां
ययोः कान्त्या यान्त्याः शशिकिरणसारूप्यसरणे-
र्विधूतान्तर्ध्वान्ताः विलसति चकोरीव जगति ॥३७॥
Vishuddhou the shuddha sphatika visadham vyoma janakam
Shivam seve devimapi siva samana vyavasitham
Yayo kaanthya sasi kirana saaroopya sarane
Vidhoo thantha dwarvantha vilamathi chakoriva jagathi
 தாயே உன்னுடைய  விசுத்திச் சக்கரத்தில் , ஆகாய தத்துவத்தை உண்டுபண்ணுபவரும்சுத்த ஸ்படிகமணி  போல் நிர்மலமானவருமான பரமசிவனையும் , உன்னையும்  தியானம் செய்பவன் , உங்களிடமிருந்து  வெளிவருகின்ற  வெண்ணிலாவைப் போன்ற ஒளிமயமான  காந்தியினால் , அறியாமை இருள் அழிக்கப்பட்டு , முழு நிலவைக் கண்ட  சகோரபட்ஷி போல் ,    அமிர்தம் அருந்திய பரமானந்தத்தை அடைகிறான்
(38)
*समुन्मीलत्संवित्कमलमकरन्दैकरसिकं
भजे हंसद्वन्द्वं किमपि महतां मानसचरं
यदालापादष्टादशगुणितविद्यापरिणति-
र्यदादत्ते दोषात् गुणमखिलमद्भ्यः पय इव ॥३८॥
Samunmeelath samvithkamala makarandhaika rasikam
Bhaje hamsadwandham kimapi mahatham maanasacharam
Yadhalapaa dhashtadasa gunitha vidhyaparinathi
Yadadhathe doshad gunamakhila madhbhaya paya eva
  அன்னையே ! எந்த இரு ஹம்சத்தினுடைய பேச்சானது ( ஒலி ),18 வித்தைகளுக்கு ( தந்திரம்/ கலை )   மூலமாக இருக்கின்றதோ , பாலிலிருந்து தண்ணீரை பிரிப்பது போல் சகல தோஷங்களையும் பிரித்து , குணங்களை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனவோமகான்களுடைய மனமாகிய (ஞானம் ) தாமரை மலரிலுள்ள தேனைப்  பருகுகின்றனவோஅத்தகைய  வருணனைக்கும்  அப்பாற்பட்ட மகிமையுடன் கூடிய  ஹம்ச தம்பதிகளான உங்களை என்னுடைய   இதயகமலத்தில் தியானம் செய்து  நமஸ்க்கரிக்கிறேன்

(39)
*तव स्वाधिष्ठाने हुतवहमधिष्ठाय निरतं
तमीडे संवर्तं जननि! महतीं तां समयाम्
यदालोके लोकान् दहति महति क्रोधकलिते
दयार्द्रा या दृष्टिः शिशिरमुपचारं रचयति ॥३९॥
Thava swadhishtane huthavahamadhishtaya niratham
Thameede sarvatha janani mahathim tham cha samayam
Yadhaloke lokan dhahathi mahasi krodha kalithe
Dhayardhra ya drushti sishiramupacharam rachayathi
 தாயேகாலாக்னி  ருத்ரரையும் , அந்த காலாக்னி ருத்ர  ரூபிணியான உன்னையும் , என்னுடைய சுவாதிஷ்டான  சக்கரத்தில் (   அக்னி ) , தியானம் செய்து வணங்குகிறேன்சிவனுடைய  ருத்ராக்னி  பார்வையானது உலகங்களை அழிக்கும் சமயம் , உன்னுடைய  நிலவைப் போன்ற கனிந்த பார்வையானது , (சந்திரகலா சக்தி /சமயா /சந்திரகலா தேவீஇந்த உலகை  மீண்டும் குளிரச்  செய்கின்றது . (தகிக்கப்பட்ட மன்மதன் உன்  கருணையால் ரதியின்  கண்களுக்கு  மட்டும் தெரிவது போல் ).

(40)
*तटित्वन्तं शक्त्या तिमिरपरिपन्थिस्फुरणया
स्फुरन्नानारत्नाभरणपरिणद्धेन्द्रधनुषं
तव श्यामं मेघं किमपि मणिपूरैकशरणम्
निषेवे वर्षन्तं हरमिहिरतप्तं त्रिभुवनम् ॥४०॥
Thatithwantham shakthya thimira paree pandhi sphuranaya
Sphuranna na rathnabharana pareenedwendra dhanusham
Thava syamam megham kamapi manipooraika sharanam
Nisheve varshantham haramihira thaptham thribhuvanam.
 அம்மாமணி பூரகச்( நீர் ) சக்கரத்தை மூலமாகக் கொண்டுசிவனை, மழைக் காலத்து   நீண்ட   கருத்த மேகமாகவும்  , உன்னை  மின்னல் கொடியாகவும் நினைத்து வணங்குகிறேன்இருளைப் போக்கும் மின்னலாக நீ இருக்கிறாய் . நீ அணிந்திருக்கும் ரத்ன  ஆபரணங் களிலிருந்து வீசும் ஒளியானது , அந்த மேகங்கள் ஒளிமயமாக இந்திர வில்லுடன் கூடியது போல் தோன்றுகிறது . காலாக்னி   ருத்ரனால் தகிக்கப்பட்ட   மூ உலகங்களையும் , தன் அமுத  மழையினால் குளிரச்  செய்கின்ற  உன்னுடைய சதாசிவ தத்துவத்தை வணங்குகின்றேன் .

(41)
*तवाधारे मूलॆ सह समयया लास्यपरया
नवात्मानं मन्ये नवरसमहाताण्डवनटम्
उभाभ्यामेताभ्यामुदयविधिमुद्दिश्य दयया
सनाथाभ्यां जज्ञे जनकजननीमज्जगदिदम् ॥४१॥ 

Thavadhare mole saha samayaya lasyaparaya
Navathmanam manye navarasa maha thandava natam
Ubhabhya Methabhyamudaya vidhi muddhisya dhayaya
Sanadhabyam jagne janaka jananimatha jagathidam.
 தாயே ! உன் மூலாதாரத்தில் , நடனத்தில்  பிரியமுள்ள  சமயாதேவியுடன் , ஸ்ருங்கார ரசங்களுடன் மகா தாண்டவ நடனம் செய்யும்  ஆனந்தபைரவருடன் உன்னையும்  தியானம் செய்து வணங்குகிறேன் . பிரளய காலத்தில் அழிந்த உலகத்தை மீண்டும் உண்டாக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவ நடனம் செய்வதால் , பைரவர் , பைரவி ஆகிய உங்களை கருணை வடிவான  தாய் , தந்தையராக  இவ்வுலகம்  அடைந்தது .

(42)
गतैर्माणिक्यत्वं गगनमणिभिः सान्द्रघटितं
किरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति यः
नीडे यच्छायाच्छुरणशबलं चन्द्रशकलं
धनुश्शौनासीरं किमिति निबध्नाति धिषणां ॥४२॥
Gathair manikyatvam gagana-manibhih-sandraghatitham.
Kiritam te haimam himagiri-suthe kirthayathi yah;
Sa nideyascchaya-cchurana-sabalam chandra-sakalam
Dhanuh saunasiram kim iti na nibadhnati dhishanam.
 அன்னையேமலையரசன் பெற்ற மாணிக்கமேஉன்னுடைய  கிரீடத்தை  எந்த பக்தனாவது வருணிக்க நினைத்தால்பன்னிரண்டு  சூரியர்களே , மாணிக்கங்களாக இழைக்கப்பட்டிருக்கும் உன் கிரீடத்தில், நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருக்கும் இரத்தினங்களின் ஒளியால்மின்னுகின்ற உன்னுடைய  சந்திரக்கலைதனைவானவில்லோ அல்லது   இந்திரதனுசோ  என்றே எண்ணுவான்

(43)
धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनं
घनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुंबं तव शिवे
यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसो
वसन्त्यस्मिन् मन्ये वलमथनवाटीविटपिनाम् ॥४३॥
Dhunotu dhvaantam nas tulita-dalit'endivara-vanam
Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive;
Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso
Vasanthyasmin manye vala-madhana-vaati-vitapinam.
  தாயே! மலர்ந்த கருங்குவளை ( நீலோத்பலம் ) மலர்க்காடு போன்றதும் , நெருக்கமானதும் , மிருதுவானதும், வழ வழப்பானதுமான உன் கேசத்தின் அழகுஎங்களின் அறியாமையை நீக்கட்டும் . உன் கேசத்தின் இயற்கை மணத்தைத் தானும் அடைய எண்ணி , இந்திரனுடைய  நந்தவனத்து மலர்கள் உன்  கூந்தலை அலங்கரிக்கின்றனவோ
(44)

तनोतु क्षेमं नस्तव वदनसौन्दर्यलहरी
परीवाहस्रोतस्सरणिरिव सीमन्तसरणिः।
वहन्ती सिन्दूरं प्रबलकबरीभारतिमिर-
द्विषां वृन्दैर्बन्दीकृतमिव नवीनार्ककिरणम् ॥४४॥
Tanothu kshemam nas tava vadhana-saundarya lahari
Parivaha-sthrotah-saraniriva seemantha-saranih
Vahanti sinduram prabala-kabari-bhara-thimira-
Dvisham brindair bandi-krtham iva navin'arka kiranam;
 அம்மா ! உன் கேசத்தின் நடுவில் உள்ள வகிடு , உன் முகத்திற்கு அழகு சேர்க்கின்றது . பால சூர்யா கிரணம் போன்று உன் வகிட்டில் மின்னும் சிந்தூர வர்ண குங்குமமானது , உன் அடர்ந்த இருட்டு போன்ற, கருமையான கேசம் என்ற எதிரிகளின் சிறையில் அடைக்கப்பட்டது போல் உள்ளது . அந்த  முகத்தின்  அழகு வெள்ளத்திற்கு  கால்வாய் போன்ற உனது கேச வகிடுஎங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரட்டும்
(45)

अरालैः स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकैः
परीतं ते वक्त्रं परिहसति पङ्केरुहरुचिं
दरस्मेरे यस्मिन् दशनरुचिकिञल्करुचिरे
सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिहः ॥४५॥
Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih
Paritham the vakhtram parihasati pankheruha-ruchim;
Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire
Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.
 தாயே ! இயற்கையாகவே சுருண்டதும் , இள வண்டுகள் போல் பளபளப்புடன் தங்கமயமாக ஒளிரும் கேசத்தையுடைய உன்னுடைய அழகான தங்க முகம், தாமரை மலரையும் பரிகாசம் செய்கின்றது . இந்த அழகிய முகத்தில் இதழ்கள் போன்று வரிசையான  பல் வரிசையுடன் கூடிய உன் புன்சிரிப்பைக் கண்ட , காமனையும் வென்ற பரமசிவனின் கண்களாகிய வண்டுகள் , மயங்குகின்றன .  
(46)
ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव यत्
द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलं
विपर्यासन्यासादुभयमपि संभूय मिथः
सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥४६॥
Lalatam lavanya-dyuthi-vimalamaabhati tava yath
Dvithiyam tan manye makuta-ghatitham chandra-sakalam;
Viparyasa-nyasad ubhayam api sambhuya cha mithah
Sudhalepa-syutih pareenamati raka-himakarah.
 தாயே ! உன் நெற்றி   கீழ் நோக்கித் தொங்கவிடப்பட்ட , மற்றொரு சந்திரக்கலை போல் இருக்கிறது . உன் மணி முடியிலுள்ள  சந்திரக்கலையையும் , நெற்றியிலுள்ள சந்திரக்கலையையும் ஒன்றுடன் ஒன்று  திருப்பிவைத்துப் பொறித்தினால் , அது அமிர்தம் நிறைந்த முழு நிலவு போல்  ஆகுமே  !   
(47)
भ्रुवै भुग्ने किञ्चित् भुवनभयभंगव्यसनिनि !
त्वदीये नेत्राभ्यां मधुकररुचिभ्यां धृतगुणम्
धनुर्मन्ये सव्येतरकरगृहीतं रतिपतेः
प्रकोष्ठे मुष्टौ स्थगयति निगूढान्तरमुमे ॥४७॥
Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini
Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam;
Dhanur manye savye'tara-kara-grhitam rathipateh
Prakoshte mushtau ca sthagayati nigudha'ntharam ume
 சகல உலகங்களுக்கும் அபயமளிக்கும் அன்னையே ! உமையே ! சற்றே வளைந்திருக்கும் உன்  புருவங்கள், உன் கண்களாகிய வண்டுகளை , நாண் கயிறாகக் கொண்ட காமனின் வில் போல்  தோன்றுகிறது . காமனும்  அதனை இடது கரத்தால் பிடித்தது போல், அவனின் முழங்கையும், மணிக்கட்டும் ,கைவிரல்பிடியும் , உன்னுடைய முகத்தின் மத்திய பாகத்தை மறைப்பது போல் உள்ளது

(48)
अहः सूते सव्यं तवनयनमर्कात्मकतया
त्रियामां वामं ते सृजति रजनीनायकतया
त्रितीया ते दृष्टिर्दरदलितहेमांबुजरुचिः
समाधत्ते संध्यां दिवसनिशयोरन्तरचरीम् ॥४८॥
Ahah sute savyam tava nayanam ark'athmakathaya
Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih
Samadhatte sandhyam divasa-nisayor antara-charim
 தாயே ! சூர்யன் போன்ற உன் வலது கண் பகலையும் , சந்திரன் போன்ற இடது கண் இரவையும் உண்டாக்குகின்றது .சற்றே மலர்ந்த தங்கத் தாமரை  போன்ற உனது மூன்றாவது கண் , காலை, மாலை ,என்ற இரண்டு சந்தியா  காலங்களை உண்டாக்குகின்றது .
(49)
विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः
कृपाधारा धारा किमपि मधुरा भोगवतिका
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया
ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥४९॥
Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih
Kripa-dhara-dhara kimapi madhur'a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya
Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate
 தாயே ! உன் கண்கள் விசாலமானது . அதனால் விசாலா என்றும் , மங்களமானதால் கல்யாணீ என்றும், இந்தீவர புஷ்பம் போன்றுப்ளூ லில்லிஅழகானதால் அயோத்யா என்றும் , கருணை உள்ளவளாதலால்  தாரா என்றும் , மாதுர்யத்தோடு கூடியவளாதலால் மதுரா இனிமையானவள் என்றும் , ஆழ்ந்து இருப்பதால் போகவதி என்றும் , சகல உலகங்களையும்  காக்கும்   சக்தி  உள்ளவளாதலால்  அவந்தி என்றும் , நகரங்களின் பெயர்களைச் கொண்டு  அழைக்கும்படியான தகுதி கொண்டதே .
(50)
कवीनां सन्दर्भस्तबकमकरन्दैकरसिकं
कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्णयुगलं
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला-
वसूया संसर्गादलिकनयनं किञ्चिदरुणम् ॥५०॥
Kavinam sandharbha-sthabaka-makarandh'aika-rasikam
Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras'asvada tharalau-
Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.
 அம்மா ! உன் காதுகள்  கவிகளின்  காவியங்களான மலர்களில் உள்ள தேனைச் சுவைக்கின்றன. உன் கண்கள்   நவரசங்களைப்  பருகும் வண்டுகள் போல் , உன்   காதுகளை விட்டு அகலாமல் இருக்கின்றன . உன் கண்களைக் கண்டு பொறாமைக் கொண்ட  உன் மூன்றாவது நெற்றிக்கண், சிறிது சிவந்தது போல் தோன்றுகிறது . (காது வரை நீண்ட  அழகிய கண்கள்  ) .   

4 comments:

  1. Thank you very much for the divineful service

    ReplyDelete
  2. Thank You so much........

    ReplyDelete
  3. May God bless you and your family

    ReplyDelete
  4. T-Shirt - Titanium Rings | Tee-making.com
    T-Shirt: T-Shirt - Titanium Rings | Tee-making.com. 출장안마 T-Shirt T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. titanium i phone case T-Shirt. is titanium expensive T-Shirt. T-Shirt. titanium for sale T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. T-Shirt. titanium grinder

    ReplyDelete